அண்ணாசாலையில் பரபரப்பு: முக கவசம் பதுக்கிவைத்திருந்த மருந்து கடைக்கு சீல் வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அண்ணாசாலையில் பரபரப்பு: முக கவசம் பதுக்கிவைத்திருந்த மருந்து கடைக்கு சீல் வைப்பு

சென்னை: அண்ணாசாலையில் முக கவசங்களை பதுக்கிவைத்திருந்த மெடிக்கல் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நாட்டையே உலுக்கிவரும் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்கள் கூடும் இடங்கள், ரயில், பஸ் நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்வனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ைன மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று இரவு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரே உள்ள மெடிக்கல் கடையில் முக கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து அந்த மெடிக்கல் கடைக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தபோது அங்கு ஏராளமான முக கவசங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மெடிக்கல் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை முழுவதும் முக கவசங்களை பதுக்கிவைப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மெடிக்கல் கடையிலும் தீவிர சோதனை நடத்தப்படும்.

மருத்துவ உபகரணங்கள் பதுக்கிவைப்பதும் அதிக விலைக்கு விற்பது குறித்து 104 எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை