நிலவேம்பு, கபசுர குடிநீர் கொரோனாவை தடுக்க கசாயம்?... சித்த மருத்துவர்கள் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிலவேம்பு, கபசுர குடிநீர் கொரோனாவை தடுக்க கசாயம்?... சித்த மருத்துவர்கள் ஆலோசனை

சென்னை: ஆடாதொடை, சித்தரத்தை, அதிமதுரம், மிளகு, திப்பிலி ஆகியவற்றிலிருந்து கசாயம் செய்து குடித்தால் தமிழகத்தின் பக்கமே கொரோனா வைரஸின் பாதிப்பு இருக்காது என்று சித்த மருத்துவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவுவதையடுத்து மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரளா, டெல்லியை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்து அரசு சித்த மருத்துவர்கள் கூறியதாவது: கொரோனா வைரஸை ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் துணையோடு இந்த வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எளிதாக மீளலாம். அதற்கு நாம் உண்ணும் உணவோடு சில மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு வைரஸ் தாக்குதலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிக்கன் குனியா காய்ச்சலின்போது மூட்டு பாதிப்பு இருந்தது. டெங்குக் காய்ச்சலின்போது ரத்த தட்டணுக்கள் குறைந்தன.

தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவில் தற்போது இறப்பு விகிதம் குறையத் தொடங்கியுள்ளது.

அதனால் தமிழக மக்கள், கொரோனா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் துணையோடு இந்த வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எளிதாக பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதையடுத்து நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் வகையில் ஆடாதொடை இலைகள், சித்தரத்தை, அதிமதுரம் தேவையான அளவு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60 மிலியும் கொடுக்கலாம்.

மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம்.

மாலையில், தூதுவளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவளை சூப் செய்து பருகலாம். அதைப்போன்று வாரம் ஒரு முறை நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், விஷசுர குடிநீர் விற்கப்படுகிறது.


அதை வாங்கி பருகினால் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்ெகாள்ளலாம். சளி, காய்ச்சல் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் சித்த மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வராது. எனவே ஆடாதொடை, தூதுவளை, கபசுர குடிநீர், விஷசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவை சாப்பிடுவதன் மூலம் நிச்சயம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம், என்று கூறப்படுகிறது.

இவ்வாறு சித்த மருத்துவர்கள் கூறினர்.


.

மூலக்கதை