சில நாடுகள் ஆன்லைனில் வகுப்பு எடுக்கின்றன; உலகம் முழுவதும் 85 கோடி மாணவர்களின் கல்வி பாதிப்பு: மிகப்பெரிய சவாலால் யுனெஸ்கோ கவலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சில நாடுகள் ஆன்லைனில் வகுப்பு எடுக்கின்றன; உலகம் முழுவதும் 85 கோடி மாணவர்களின் கல்வி பாதிப்பு: மிகப்பெரிய சவாலால் யுனெஸ்கோ கவலை

பாரீஸ்: கொரோனா பாதிப்பால், சில நாடுகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கின்றன. ஆனால், 85 கோடி மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லாததால் அவர்களின் கல்வி பாதித்துள்ளதால், அது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று யுனெஸ்கோ கவலையுடன் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் 85 கோடிக்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கல்விக் கூடங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் கொரோனா பரவல் தடுப்புக்காக கல்வி நிறுவனங்களுக்கு செல்வதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ (ஐ. நா) தெரிவித்துள்ளது.

மேலும், 102 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும், மேலும் 11 இடங்களில் ஓரளவு மூடப்பட்டிருப்பதாகவும், இன்னும் அதிகமான கல்வி நிறுவனங்கள் மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டால், படிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை நான்கு நாட்களில் இரட்டிப்பாக  குறைய வாய்ப்புள்ளது.

கல்வி நிறுவனங்கள் மூடப்படுவது, முன் எப்பொழுதும் இல்லாத ஒரு சவாலை சந்தித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆன்லைன் முறையில் வகுப்புகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப முறையில் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதாக யுனெஸ்கோ கூறுகிறது.

சில நாடுகள் தொலைக்காட்சி அல்லது வானொலியில் வகுப்புகளை வழங்கி வருகின்றன. சிறந்த தீர்வுகளைக் கண்டறிந்து முன்னுரிமைகளைத் தீர்மானிக்க உலகெங்கிலும் உள்ள கல்வி அமைச்சர்களுடன் வழக்கமான சந்திப்புகளை நடத்துவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.



தற்போதைய நிலைமையில், அனைத்து குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தடையற்ற கற்றலை சமமான முறையில் வழங்க அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவால்களாக இருக்கும். உலக மாணவர்களின் கல்விக்கு கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.


.

மூலக்கதை