கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு,  தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்து சோப்புடன் கைகளைக் கழுவுமாறு  மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், உலக சுகாதார நிறுவனத்தின் #SafeHandsChallenge என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கில் இணைந்தார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், அவர் தனது கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவுவதன் முக்கியத்துவம் குறித்து செயல்வடிவில் எடுத்துக் கூறுகிறார்.

அதேபோல், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பரப்பும் முயற்சியில், நட்சத்திர இந்திய தடகள வீரர் ஹிமா தாசும், அதே ஹேஷ்டேக்கில் இணைந்து கருத்து தெரிவித்துள்ளார்.

சச்சின் வெளியிட்ட பதிவில், இந்திய வீராங்கனைகள் எம். சி மேரிகோம், சானியா மிர்சா மற்றும் ராணி ராம்பால் போன்றவர்களை விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். முன்னதாக, ஏஸ் இந்தியன் ஷட்லர் பி. வி சிந்து, ஒரு விழிப்புணர்வு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார்.

அதில் அவர் சோப்புடன் கைகளை கழுவுவதை கிட்டத்தட்ட 30 விநாடிகள் செலவாவதை எடுத்துக் கூறினார்.

.

மூலக்கதை