உலக சுகாதார அமைப்பு ஊழியர்களுக்கு கொரோனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக சுகாதார அமைப்பு ஊழியர்களுக்கு கொரோனா

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் உள்ள உலக  சுகாதார தலைமையக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா   வைரஸ் தாக்குதல் இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பு  தலைமையகத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்களுக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், வைரசால் பாதிக்கப்பட்ட 2 ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இங்கு பணியாற்றி வரும் சக ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.   பரிசோதனை நடத்தியதில் இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை