தாய்லாந்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் குண்டு வீச்சில் 20 பேர் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தாய்லாந்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் குண்டு வீச்சில் 20 பேர் படுகாயம்

பாங்காக்: தாய்லாந்தில் அரசு அலுவலகம் ஒன்றில்  கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்ற போது திடீரென மர்ம நபர் குண்டு வீசி தாக்கினார்.
தாய்லாந்தில், யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டை அலுவலகத்திற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார்.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த செய்தியாளர்கள், போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

மற்றும் கார் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபரை தேடி வருகின்றனர்.


.

மூலக்கதை