ஜேம்ஸ் பாண்ட் நடிகைக்கு கொரோனா பாதிப்பு: வீட்டுக்குள் அடைபட்டுகிடக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜேம்ஸ் பாண்ட் நடிகைக்கு கொரோனா பாதிப்பு: வீட்டுக்குள் அடைபட்டுகிடக்கிறார்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் பாண்ட் நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனி அறையில் முடங்கிக்கிடக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு திரைக்கு வந்த, ‘குவான்டம் ஆப் சோலஸ்’ ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கெரெக் நடித்தார்.   அப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஒலேகா குரைலென்கோ.

2013ம் ஆண்டு வெளியான ஓபிலிவியன் சைன்ஸ் பிக்ஸன் படத்திலும் ஒலேகா நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சியான தகவல் வெளியிட்டிருக்கிறார்.

‘கடந்த ஒரு வாரமாக காய்ச்சலில் இருக்கிறேன்.

பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சோர்வும் காய்ச்சலும்தான் இதற்கான அறிகுறி.

தற்போது வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருக்கிறேன். அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த வாரம் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிடா வில்சன் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டபோது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை