ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்

வாஷிங்டன்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் மிகப் பெரிய அளவில் பங்கேற்கின்றனர்.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குதலால், ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் அல்லது நிகழ்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஊகங்களை சர்வதேச விளையாட்டு அமைப்புகளும் நாடுகளும் கோரி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தாக்குதல் உலகளவில் பரவி உள்ளதால், டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடம் தாமதப்படுத்துவது சரியாக இருக்கும்.

இதனை ஒலிம்பிக் குழு அதிகாரிகள்  பரிசீலிக்க வேண்டும். இது ஒரு சிக்கலான விசயம் என்றாலும், மைதானங்களை வெற்று அரங்குகளாக வைத்திருப்பதை விட போட்டியை ஒத்திவைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, வருகிற 26 முதல் 29ம் தேதி வரை துபாயில் திட்டமிடப்பட்ட ஐசிசி-யின் வருடாந்திர வாரியக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோவில், ‘கொரோனா உலகளாவிய பரவலின் காரணமாக, ஐசிசி உறுப்பினர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர்.

வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது தான் தற்போதைய முக்கியத்துவமாக உள்ளது. ஐசிசி நிர்வாகம், மார்ச் இறுதியில் துபாயில் திட்டமிடப்பட்ட கூட்டங்கள், மே முதல் வாரத்தில் நடத்தப்படும்.

அவ்வப்போது அவசர முடிவுக்கான விஷயங்களை மட்டுமே ஐசிசி பரிசீலிக்கும்.

மே மாத தொடக்கத்தில் முழு கூட்டங்களும் நடத்த திட்டமிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை