இந்தியாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி: அமைச்சரின் கருத்தால் கங்குலி ‘அப்செட்’...ஐபிஎல் போட்டியால் ஐசிசி - பிசிசிஐ தடுமாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி: அமைச்சரின் கருத்தால் கங்குலி ‘அப்செட்’...ஐபிஎல் போட்டியால் ஐசிசி  பிசிசிஐ தடுமாற்றம்

மும்பை: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 போட்டி மும்பையில் வருகிற 29ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால், இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், ‘‘மக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடும் போது அங்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும், அது மற்றவர்களுக்கும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

அதனால், சிறிது காலத்துக்கு மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’’ என்றார்.


இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகயில், ‘‘ஐபிஎல் போட்டியை தள்ளிவைக்கும் திட்டம் எதுவுமில்லை. போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்.போட்டிக்கு முன்னதாகவும், போட்டியின் போதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஒவ்வொரு அணி நிர்வாகத்திடமும் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக மேற்கொள்ளும்’’ என்றார்.

மகாராஷ்டிர அமைச்சரின் பேட்டிக்கும், பிசிசிஐ தலைவர் பேட்டிக்கும் முரண்பாடுகள் உள்ளன. மாநில நிலைமையை கையாள வசதியாக ஐபிஎல் போட்டிைய ஒத்திவைக்க அம்மாநில அரசு தொடர்ச்சியான விவாதங்களை நடத்தி வருகிறது.

மும்பையில் போட்டி நடைபெறவில்லை என்றால், மற்ற மாநிலங்களும் இதே முறையையே பின்பற்றி போட்டியை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால், ஒட்டுமொத்தமாக போட்டி ரத்து செய்யப்படலாம்.

சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஏற்கனவே தயார்படுத்தப்பட்டதால், இந்த விஷயத்தில், ஐசிசி - பிசிசிஐ - ஐபிஎல் நிர்வாகங்கள் தடுமாற்றத்தில் உள்ளன.

.

மூலக்கதை