சச்சினுடன் குத்துசண்டை விளையாட்டு இம்ரான் வளரும் போது தெரிந்து கொள்வான்: இர்பான் வெளியிட்ட வீடியோவில் நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சச்சினுடன் குத்துசண்டை விளையாட்டு இம்ரான் வளரும் போது தெரிந்து கொள்வான்: இர்பான் வெளியிட்ட வீடியோவில் நெகிழ்ச்சி

மும்பை: உலக சாலை பாதுகாப்புக்கான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கிய நிலையில், இந்திய லெஜன்ட்ஸ் அணியை வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. இந்திய அணியில் சச்சின், சேவாக், ஜாகீர் கான், இர்பான் பதான், கைப், யுவராஜ் சிங் என நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் ஆடினர்.

இதனால் இப்போட்டி ரசிகர்களுடைய பழைய நினைவுகளை மீண்டும் கிளறியது. சமூக வலைதளங்களில் சச்சினின் ரசிகர்கள் அனைவரும் சச்சினைக் கொண்டாடினர்.

இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் இர்பான் பதான் மகன் இம்ரான், சச்சினுடன் குத்துச்சண்டை விளையாடியிருந்தார்.

அந்த வீடியோவுடன், ‘இம்ரான் என்ன செய்தான் என்று அவனுக்கு தெரியாது. ஆனால் வளரும் போது அவன் தெரிந்துகொள்வான்’ என்று பதிவிட்டிருந்தார்.

இர்பான் பதான் மகனுடன் சச்சின் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதனைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

.

மூலக்கதை