இலங்கை வீராங்கனை ஓய்வு அறிவிப்பு; ஜெர்சி வழங்கி கவுரவிப்பு: இந்திய மகளிர் அணி நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை வீராங்கனை ஓய்வு அறிவிப்பு; ஜெர்சி வழங்கி கவுரவிப்பு: இந்திய மகளிர் அணி நெகிழ்ச்சி

மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஜாம்பவான் சசிகலா சிறிவர்தன அறிவித்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டிக்கு பின் தனது ஓய்வை தொடர்வார்.

இந்நிலையில், சசிகலா சிறிவர்தனவின் எதிர்கால வாழ்க்கைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள், தாங்கள் கையெழுத்திட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியொன்றையும் அன்பளிப்பாக வழங்கினர்.

இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மார்ச் 2003ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை 118 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 2029 ரன்களை குவித்து, 124 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே இலங்கை வீராங்கனை இவர்தான். 80 சர்வதேச, டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1,097 ரன்களை எடுத்துள்ளதுடன், 73 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவை வீழ்த்திய 2013ம் ஆண்டில் இலங்கை அணியின் தலைவராக இருந்தார்.

.

மூலக்கதை