வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ஒன்டே ‘வொயிட்வாஷ்’ செய்தது இலங்கை: ஆட்ட நாயகனாக மேத்யூஸ் தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ஒன்டே ‘வொயிட்வாஷ்’ செய்தது இலங்கை: ஆட்ட நாயகனாக மேத்யூஸ் தேர்வு

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வொயிட் வாஷை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 307 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஃபேபியன் ஆலன் 37 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் வெற்றி உறுதியானது.

இறுதியாக, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது.

இலங்கை அணி சார்பாக மேத்யூஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர் நாயகனாக ஹசரங்காவும் தேர்வு செய்யப்பட்டார்..

மூலக்கதை