துரோணாச்சார்யா விருது பெற்ற தடகள பயிற்சியாளர் திடீர் மறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
துரோணாச்சார்யா விருது பெற்ற தடகள பயிற்சியாளர் திடீர் மறைவு

புதுடெல்லி: மூத்த தடகள பயிற்சியாளரும், துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஜோகிந்தர் சிங் சைனி (90), இந்தியாவின் மிகச்சிறந்த டிராக் மற்றும் ஃபீல்ட் நட்சத்திரங்களை உருவாக்கிய சிறந்த பயிற்சியாளர். வயதுமூப்பு பிரச்னைகளால் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று பாட்டியாலாவில் காலமானார்.

1970ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டுகள் வரை தலைமை தேசிய தடகள பயிற்சியாளராக இருந்தார். ஜனவரி 1, 1930ல் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தில் பிறந்த சைனி அறிவியல் பட்டதாரியாக இருந்து, 1954ல் தடகள பயிற்சியாளராக ஆனார்.1970ல் அமெச்சூர் தடகள கூட்டமைப்பின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார். இந்திய தடகளத்தில் பங்களித்ததற்காக 1997ல் துரோணாச்சார்யா விருதைப் பெற்றார்.

1978ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் எட்டு தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்ற இந்திய தடகள அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை