கொரோனா வைரசுக்கு 3001 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா வைரசுக்கு 3001 பேர் பலி

பீஜிங்: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 67 நாடுகளுக்குபரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்குச் சீனாவில் மட்டும் சுமார் 3000 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 88,375 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் ஈரானில் 11 பேர் உள்பட 24 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு அனைத்து மருத்துவ உதவிகளைச் செய்து தர போதிய ஆலோசனைகள் வழங்கவும் சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதேபோல், ஈரானில் சிக்கியுள்ள கேரள மீனவர்களை மீட்டு வரவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதையடுத்து, ஈரானில் தவித்துவரும் இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் இத்தாலியில் 34 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதுவரை அந்நாட்டில் கொரோனா வைரசால் 1694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன், காரணமாக அந்நாட்டின் வடக்குப் பகுதியில் பல்வேறு நகரங்களுக்கு வெளியாட்கள் செல்லவும், அங்கிருப்பவர்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ள பல்கலைக்கழக நகரமான பாவியாவில் சுமார் 85 இந்திய மாணவர்கள் ஒரு வாரமாகச் சிக்கித் தவிக்கின்றனர்.

.

மூலக்கதை