மலேசியாவின் 8வது பிரதமராக முஹைதீன் பதவியேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மலேசியாவின் 8வது பிரதமராக முஹைதீன் பதவியேற்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் முகமது மஹாதிர் ராஜினாமா செய்த நிலையில், மலேசியாவின் 8வது பிரதமராக முஹைதீன் யாசின் பதவியேற்றார். மலேசியாவில் கடந்த 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் மஹாதீர் முஹம்மதின் மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதிக் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றன.

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்ட பின்னர், பதவியை அன்வரிடம் அளிப்பதாக மஹாதீர் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால், கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மோதல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், மஹாதீர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் அந்நாட்டு மன்னர் சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹமது ஷா ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து முஹைதீன் யாசினை (72) புதிய பிரதமராக மன்னர் அறிவித்தார். இன்று, அந்நாட்டின் 8வது பிரதமராக முஹைதீன் பதவியேற்றார்.

அவருக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.


.

மூலக்கதை