மோடி எனக்கு சிறந்த நண்பர்: மீண்டும் புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மோடி எனக்கு சிறந்த நண்பர்: மீண்டும் புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி எனக்கு சிறந்த நண்பர் என்று, அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீண்டும் புகழ்ந்து தள்ளினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவில் 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தில் அவர் அகமதாபாத், சமர்பதி ஆசிரமம் மற்றும் தாஜ்மஹால் ஆகியவற்றுக்கு சென்றார். குறிப்பாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில், அவர் பொது மக்களிடையே ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் தனது இந்தியப் பயணம் பற்றி பேசியுள்ள அதிபர் டிரம்ப், ‘இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் மோடியை நேசிக்கின்றனர்.

மோடி எனக்கு சிறந்த நண்பர்.

அகமதாபாத்தில் ஒரு லட்சம் மக்கள் மத்தியில் உரையாற்றியதை போன்ற நெகிழ்ச்சியான சம்பவம் மீண்டும் வராது. இந்தியாவிற்கு சென்றுவிட்டு வந்த பிறகு அதுபோன்ற ஒரு மக்கள் திரளை இனி நான் காணப்போவதில்லை.

இந்திய மக்களிடம் எனக்கு பெரிய அன்பு இருக்கிறது. அவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு உண்டு.

அது உண்மையில் ஒரு பயனுள்ள பயணம்” என்று பேசினார்.


.

மூலக்கதை