கொரோனா பலி 2,835 ஆக உயர்வு: மெக்சிகோவில் 2 பேருக்கு பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பலி 2,835 ஆக உயர்வு: மெக்சிகோவில் 2 பேருக்கு பாதிப்பு

பிஜீங்: கொரோனா வைரஸ் தாக்குதலின் பலி எண்ணிக்கை 2,835 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் 50 நாடுகளுக்கு பரவி சீனா உட்பட 2,835 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 79,251 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் ஒரே நாளில் 47 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது அந்நாட்டு அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டின் துணை சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், ‘அண்மையில் இத்தாலிக்கு சென்றுவிட்டுத் திரும்பிய இருவருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’ என்றார்.

இதில், பிரேசிலைத் தொடர்ந்து கொரோனா வைரசை உறுதி செய்துள்ள இரண்டாவது நாடு மெக்சிகோ என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை