அப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
அப்பவும் சொன்னேன்; இப்பவும் சொல்றேன்...மம்தா அக்கா புளுகுகிறார்: அமித்ஷா குற்றச்சாட்டு

புவனேஸ்வர்: ‘குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மம்தா அக்காவும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பொய்களை பரப்பி வருகின்றனர்,’ என அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் மற்றும் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:இதற்கும் முன்பும் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதையே இப்போதும் சொல்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் தங்கள் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டம் குறித்து மம்தா அக்காவும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ,சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்களும் பொய்களை கூறி வருகின்றனர்.அதை மக்கள் நம்ப வேண்டாம்.  இந்த சட்டத்தின் எந்த உட்பிரிவு உங்களுக்கு சிக்கலை உண்டாக்குகிறது என்று என்னிடம் பேச வாருங்கள். இவ்வாறு அவர் ேபசினார். ஒரே மேஜையில் மம்தா-அமித்ஷாபுவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது வீட்டில் மதிய விருந்து அளித்தார். இதில், அமித்ஷாவும் கலந்து கொண்டார். அப்போது, ஒரே மேஜையில் எதிரேதிரே அமர்ந்து அமித்ஷாவும், மம்தாவும் உணவருந்தினர். அவர்களுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் சாப்பிட்டார்.

மூலக்கதை