இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி

தினகரன்  தினகரன்
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இயக்குனர் ஷங்கர் 1 கோடி உதவி

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி நிதியுதவி அளிக்கிறார் இயக்குனர் ஷங்கர். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும் வேதனையிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு எந்த உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு சிறு உதவியாக இருக்கும் என எண்ணி 1 கோடியை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்குகிறேன். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.

மூலக்கதை