ஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்

தினகரன்  தினகரன்
ஹாரி, மேகனுக்கு கனடா அரசு பாதுகாப்பு வாபஸ்

ஒட்டாவா: இங்கிலாந்து அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி. இவரது மனைவி மேகன் மார்க்கல். இந்த தம்பதி கடந்த மாதம் அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது. முன்னதாக இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய இந்த தம்பதி கடந்த நவம்பர் முதல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரையொட்டி பகுதியில் உள்ள மேன்சனில் தங்கியுள்ளனர். சர்வதேச பாதுகாப்பு மிக்க நபர்கள் என்ற அடிப்படையில் ஹாரி, மேகன் தம்பதிக்கு கனடா போலீசார் பாதுகாப்பு அளித்துவருகின்றனர். இந்த நிலையில் நாளை முதல் இந்த தம்பதிக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என கனடா பொதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேயரின் அலுவலகம் அறிவித்துள்ளது. அரச குடும்ப அந்தஸ்தை இழந்ததை அடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை