பயிற்சி! பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து ...'அம்மா' உணவக ஊழியர்களுக்கு

தினமலர்  தினமலர்
பயிற்சி! பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து ...அம்மா உணவக ஊழியர்களுக்கு

சென்னை : சுகாதாரமான, பாதுகாப்பான உணவு தயாரிக்கும் முறை குறித்து, மாநகராட்சி, 'அம்மா' உணவக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில், அம்மா உணவகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு தயாரிக்கும் முறை குறித்த ஒருநாள் பயிற்சி, மாநகராட்சி, 'அம்மா மாளிகை'யில் நேற்று முன்தினம் நடந்தது. உணவு பாதுகாப்புசென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர், பயிற்சி அளித்தனர்.இது குறித்து, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில், தனிநபருக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சியில், உணவு கூடங்களில், எவையெல்லாம் சுகாதாரமற்ற தன்மையை உருவாக்கும். அதை தடுப்பதுஎப்படி போன்ற செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இலவசம்மேலும், பயிற்சி பெற்றவர்களுக்கு, இரண்டு ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.இரண்டு ஆண்டுக்குப்பின் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற, 2,500 ரூபாய் வரை செலவாகும். ஆனால், மாநகராட்சி அம்மா உணவகங்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் என, 1,700 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை