‘விவசாயி’ தோனி | பெப்ரவரி 28, 2020

தினமலர்  தினமலர்
‘விவசாயி’ தோனி | பெப்ரவரி 28, 2020

ராஞ்சி: முன்னாள் கேப்டன் தோனி, இயற்கை விவசாயி ஆக உருவெடுத்துள்ளார்.

இந்திய அணி ‘சீனியர்’ தோனி 38. கடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் இதுவரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் வீரர்கள் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். 

வரும் மார்ச் 29ம் தேதி துவங்கும் ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக மீண்டும் களமிறங்குகிறார். இதற்கான மார்ச் முதல் வாரத்தில் சென்னை அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

இதனிடையே தோனி இயற்கை (‘ஆர்கானிக்’) விவசாயி ஆக அவதாரம் எடுத்துள்ளார். ராஞ்சியில் தண்ணீர் பழ விதைகளை தோனி ஊன்றினார். இதுகுறித்து தோனி தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

 அதில்,‘‘ராஞ்சியில் இயற்கை முறை விவசாயத்தை துவங்கியுள்ளேன். அடுத்த 20 நாட்களில் பப்பாளி பயிரிட உள்ளேன். முதன் முறையாக இப்படி களமிறங்கியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்,’ என தெரிவித்துள்ளார். 

மூலக்கதை