இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9% வளர்ச்சி அவசியம்” அருண் ஜெட்லி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9% வளர்ச்சி அவசியம்” அருண் ஜெட்லி

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9 முதல் 10 சதவிகித வளர்ச்சியை எட்டுவதுடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரட்டை இலக்கத்தில் தொடர வேண்டியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இதை அவர் கூறினார். இந்தியாவில் ஏழ்மையை குறைப்பதும், தனிநபர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து 9 சதவிகித வளர்ச்சியை உறுதி செய்த காரணத்தால் சீனா இன்று வளர்ச்சி கண்டிருப்பதாகவும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான அரவிந்த் பனகரியாவும் பங்கேற்றுப் பேசினார்.

மூலக்கதை