கொசுக்கள் பிடியில் மின்வாரியம்; ஊழியர்களுக்கு, 'டெங்கு' அபாயம்

தினமலர்  தினமலர்
கொசுக்கள் பிடியில் மின்வாரியம்; ஊழியர்களுக்கு, டெங்கு அபாயம்

சென்னை : மின்வாரிய தலைமை அலுவலகத்தை, கொசுக்கள் ஆக்கிரமித்து உள்ளதால், ஊழியர்கள், 'டெங்கு' உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, அண்ணா சாலையில், மின்வளாகம் உள்ளது. அங்கு, 10 மாடி கட்டட தலைமை அலுவலகம், மாநில மின்பகிர்ந்தளிப்பு மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 3,000 பேர் பணிபுரிகின்றனர். இரவு வரை, சில ஊழியர்களும், அதிகாரிகளும் பணிகளை மேற்கொள்கின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினர், இரவு முழுவதும் அலுவலக வளாகத்தில் தங்குகின்றனர்.

மின்வளாகத்திற்கு பின்புறம், கூவம் ஆறு ஓடுகிறது. அங்கு உற்பத்தியாகும் கொசுக்கள், மின்வாரிய அலுவலகங்கள், வாகன நிறுத்து மிடம், கழிப்பறைகள் என, அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து உள்ளன.அவை, ஊழியர்களை கடிப்பதால், அவர்கள், டெங்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுவை ஒழிக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, உயரதிகாரிகளுக்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை