லோகேஷ் ராகுல் ‘நம்பர்–2’: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 27, 2020

தினமலர்  தினமலர்
லோகேஷ் ராகுல் ‘நம்பர்–2’: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 27, 2020

துபாய்: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் ‘நம்பர்–2’ இடத்தை  தக்கவைத்துக் கொண்டார்.

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 823 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தை பாகிஸ்தானின் பாபர் ஆசம் (879 புள்ளி) தக்கவைத்துக் கொண்டார்.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (673), துணை கேப்டன் ரோகித் சர்மா (662) முறையே 10, 11வது இடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் (820) 3வது இடத்தில் நீடிக்கிறார்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, விண்டீசின் ஷெல்டன் காட்ரெல் தலா 630 புள்ளிகளுடன் 12வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (749) தொடர்கிறார்.

மூலக்கதை