ஜெமிமா நடனம் * ரசிகர்கள் உற்சாகம் | பெப்ரவரி 27, 2020

தினமலர்  தினமலர்
ஜெமிமா நடனம் * ரசிகர்கள் உற்சாகம் | பெப்ரவரி 27, 2020

 மெல்போர்ன்: இந்திய அணி வீராங்கனை ஜெமிமா, பெண் பாதுகாவலருடன் இணைந்து ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்திய பெண்கள் அணி தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் ‘மிடில் ஆர்டர்’ வீராங்கனையாக உள்ளார் ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக மைதானத்துக்கு செல்லும் வழியில் பணியில் இல்லாத பெண் பாதுகாவலருடன் இணைந்து ஜெமிமா திடீரென இந்தி பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தனது ‘டுவிட்டரில்’ வெளியிட்டது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. சுமார் 30,000 பேர் வரை பார்த்துள்ளனர். இதுகுறித்து இந்திய அணி சுழல் வீரர் அஷ்வின் அளித்த பதில் செய்தியில்,‘நடனம் சூப்பர்’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை