கவுகாத்தியில் ஐ.பி.எல்., போட்டி | பெப்ரவரி 27, 2020

தினமலர்  தினமலர்
கவுகாத்தியில் ஐ.பி.எல்., போட்டி | பெப்ரவரி 27, 2020

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி மோதும் இரண்டு போட்டிகள் கவுகாத்தியில் நடக்கவுள்ளன.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் வரும் மார்ச் 29ம் தேதி மும்பையில் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணிக்கும், அம்மாநில கிரிக்கெட் போர்டுக்கும் சரியான நட்புறவு இல்லை. இதனால் ராஜஸ்தான் அணியின் போட்டிகள் அனைத்தையும் வேறு இடத்தில் நடத்த அணி நிர்வாகம் அனுமதி கேட்டது.

இதற்க ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு அனுமதி மறுத்தது. தற்போது இரு போட்டிகளை மட்டும் வேறு இடத்தில் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது. இதையடுத்து ஏப். 5ல் டில்லி மற்றும் 9ம் தேதி கோல்கட்டா அணிகளுக்கு எதிராக ராஜஸ்தான் மோதும் போட்டிகள் கவுகாத்தியில் நடக்கவுள்ளன.

மூலக்கதை