2018-2019-ம் ஆண்டில் அரசியல் கட்சிகளின் நன்கொடை விவரம்; பாஜக ரூ.742 கோடி; காங்கிரஸ் ரூ.148 கோடி

தினகரன்  தினகரன்
20182019ம் ஆண்டில் அரசியல் கட்சிகளின் நன்கொடை விவரம்; பாஜக ரூ.742 கோடி; காங்கிரஸ் ரூ.148 கோடி

புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் திரட்டிய மொத்த நன்கொடையில் 5-ல் 4 பகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்துள்ளது. ரூ.20,000-க்கு அதிகமாக பெறப்பட்ட நன்கொடைகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பாஜக நன்கொடையாக ரூ.437.04 கோடி பெற்றது. 2018-2019-ம் ஆண்டில் 4,483 பேரிடம் இருந்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ரூ.742 கோடி நிதி திரட்டியுள்ளது. இது தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.951 கோடியில் 5-ல் 4 பங்கு ஆகும். முந்தைய நிதியாண்டில் ரூ.26 கோடி மட்டுமே நன்கொடையாக திரட்டிய காங்கிரஸ் கட்சி 605 பேரிடம் இருந்து ரூ.148 கோடி  நிதி திரட்டியுள்ளது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எலக்டோரல் டிரஸ்ட் அமைப்பின் மூலம் மட்டும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆகிய கட்சிகளுக்கு மொத்தம் ரூ.455 கோடி நன்கொடை அறிவித்துள்ளது. கடந்த2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை நன்கொடையாகப் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி, தோ்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இதே தகவலை, அக்கட்சி கடந்த 13 ஆண்டுகளாகத் தோ்தல் ஆணையத்தில் தெரிவித்து வருகிறது இவ்வாறு ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை