வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; ஈரானில் சிக்கி தவிக்கும் 700 தமிழக மீனவர்கள்

தினகரன்  தினகரன்
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; ஈரானில் சிக்கி தவிக்கும் 700 தமிழக மீனவர்கள்

தெஹ்ரான்: ஈரானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருவதால் அங்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 700 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது ஈரானையும் வாட்டி வதைக்கிறது. நேற்று வரை ஈரானில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஈரானில் தமிழகத்தை சேர்ந்த 700 மீனவர்கள் அங்கேய தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்களை சொந்த நாட்டிற்கு திரும்ப சென்று விடுமாறு படகுகளின் உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போதிள அளவில் விமானங்கள் இயக்கப்படாததால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சீனாவின் வுஹான் நகருக்கும், ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு தனி விமானம் அனுப்பியது. இதே போல் ஈரானில் சிக்கி தவிக்கும் தங்களையும் மீட்டுவர சிறப்பு விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என்று மீனவர்களும், அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை