சோனியா, ராகுல், பிரியங்கா உட்பட காங்., ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட கோரி மனு

தினகரன்  தினகரன்
சோனியா, ராகுல், பிரியங்கா உட்பட காங்., ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட கோரி மனு

புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில்  பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி ஏராளமான மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு மனுவில், வெறுக்கத்தக்க பேச்சுகளை பேசிய சோனியா, ராகுல், பிரியங்கா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவும், அவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கும்படியும்  கோரப்பட்டுள்ளது.இந்துசேனா அமைப்பு தாக்கல் செய்த மனுவில், அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லீஸ் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அக்பருதீன் ஓவைசி ஆகியோர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும்  கோரப்பட்டுள்ளது.மேலும், அந்த மனுவில், ஏஐஎம்ஐஎம். கட்சியின் எம்எல்ஏ வாரிஸ் பதானின் வெறுக்கத்தக்க பேச்சின் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் தான், டெல்லியில் 34 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே போன்ற மற்றொரு மனுவில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மூத்த தலைவர் அமானதுல்லா கான் மீது எப்ஐஆர். பதிய உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை