கீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தினகரன்  தினகரன்
கீழடி அருகே கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 19ம் தேதி தொடங்கியது. கீழடி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் என 4 இடங்களில் அகழாய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் கொந்தகை ஈமக்காட்டில் நேற்று அகழாய்வு பணி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, காப்பாட்சியர் பாஸ்கரன் ஆகியோருடன் தொல்லியல் மாணவர்கள் ஆய்வுப் பணிகளை துவக்கினர். ஆய்வு நடக்கும் இடத்திற்கு அருகே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதராக இருந்தது. அந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக மரங்களை வெட்டி புதர்களை அகற்றினர். அப்போது நான்கு இடங்களில் முதுமக்கள் தாழிகள் தென்பட்டன. இதனால் தொல்லியல் அதிகாரிகள் ஆச்சர்யமடைந்தனர்.

மூலக்கதை