8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு

தினகரன்  தினகரன்
8வது முறையாக பிஜு ஜனதா தள தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு

புவனேஷ்வர்:  ஒடிசாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றது. முதல்வராக நவீன் பட்நாயக் பொறுப்பேற்றார். இந்நிலையில், அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. தலைவர் பொறுப்புக்காக பட்நாயக் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால்,அவர் ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு பிஜு ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 8வது முறையாக பட்நாயக் மட்டுமே தலைவராக உள்ளார்.

மூலக்கதை