ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு

தினகரன்  தினகரன்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஸ்மித் மீண்டும் நம்பர் 1: கோஹ்லிக்கு பின்னடைவு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமான பின்னர் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிராக நடந்த தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 360 புள்ளிகளைக் குவித்து முன்னிலை பெற்றது. நியூசிலாந்து அணியுடன் வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்டில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. எனினும், பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி பின்னடைவை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித் முதல் இடத்துக்கு முன்னேறிய நிலையில், கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ரன் குவிக்க முடியாமல் திணறி வரும் அவர், முதல் டெஸ்டில் 2 மற்றும் 19 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.இந்திய வீரர்கள் ரகானே 8வது இடத்துக்கும், புஜாரா 9வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 34 ரன், 2வது இன்னிங்சில் 58 ரன் எடுத்த தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 10வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வேகங்கள் ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி இருவரும் டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆர்.அஷ்வின் 9வது இடத்தில் உள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர்.அணிகள் டாப் 10ரேங்க்    அணி    புள்ளி1    இந்தியா    1202    ஆஸ்திரேலியா    1083    இங்கிலாந்து    1054    நியூசிலாந்து    1055    தென் ஆப்ரிக்கா    986    இலங்கை    917    பாகிஸ்தான்    858    வெஸ்ட் இண்டீஸ்    819    வங்கதேசம்    6010    ஆப்கானிஸ்தான்    49பேட்டிங் டாப் 10ரேங்க்    வீரர்    புள்ளி1    ஸ்டீவன் ஸ்மித் (ஆஸி.)    9112    விராத் கோஹ்லி (இந்தியா)    9063    கேன் வில்லியம்சன் (நியூசி.)    8534    மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.)    8275    பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)    8006    டேவிட் வார்னர் (ஆஸி.)    7937    ஜோ ரூட் (இங்கிலாந்து)    7648    அஜிங்க்யா ரகானே (இந்தியா)    7609    செதேஷ்வர் புஜாரா (இந்தியா)    75710    மயாங்க் அகர்வால் (இந்தியா)    727பந்துவீச்சு டாப் 10ரேங்க்    வீரர்    புள்ளி1    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    9042    நீல் வேக்னர் (நியூசி.)    8433    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    8304    காகிசோ ரபாடா (தென் ஆப்.)    8025    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    7966    டிம் சவுத்தீ (நியூசி.)    7947    ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)    7758    ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.)    7699    ஆர்.அஷ்வின் (இந்தியா)    76510    கெமார் ரோச் (வெ.இண்டீஸ்)    763ஆல் ரவுண்டர் டாப் 10ரேங்க்    வீரர்    புள்ளி1    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    4732    பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)    4073    ரவீந்திர ஜடேஜா (இந்தியா)    3974    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)    2985    ஆர்.அஷ்வின் (இந்தியா)    2886    கிராண்ட்ஹோம் (நியூசி.)    2717    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)    2668    ரோஸ்டன் சேஸ் (வெ.இண்டீஸ்)    2389    கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)    2129    டிம் சவுத்தீ (நியூசி.)    212

மூலக்கதை