பாகிஸ்தான் அபார வெற்றி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் அபார வெற்றி

கான்பெரா: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது. லீ ஆன் கிர்பி 16, கேப்டன் ஸ்டெபானி டெய்லர், ஷிமெய்ன் கேம்ப்பெல் தலா 43 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி 25, ஜவேரியா கான் 35 ரன் எடுத்து வெளியேறினர். கேப்டன் பிஸ்மா மரூப் 38, நிடா தார் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜவேரியா கான் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். பாகிஸ்தான் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.  

மூலக்கதை