நெதர்லாந்து துணை தூதராக கோபால் சீனிவாசன் நியமனம்

தினகரன்  தினகரன்
நெதர்லாந்து துணை தூதராக கோபால் சீனிவாசன் நியமனம்

சென்னை: தமிழகத் துக்கான நெதர்லாந்து நாட்டின் கவுரவ துணைத் தூதராக கோபால் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகம் நேற்று வெளியிட்டது.  சென்னையில் உள்ள டிவிஎஸ் கேபிடல் பண்ட் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக கோபால் சீனிவாசன் உள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை பட்டம், மிச்சிகன் பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது நெதர்லாந்து நாட்டின் கவுவர துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து நெதர்லாந்து தூதர் மார்ட்டின் வான்டென் பெர்க் கூறுகையில், ‘‘கோபால் சீனிவாசன் தமிழகத்துக்கான நெதர்லாந்தின் கவுரவ துணை தூதராக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இதனால், தமிழகத்துடன் கடந்த 400 ஆண்டுகளாக நெதர்லாந்துக்கு இருந்து வந்த தொடர்பு நீடிக்கும்’’ என்றார். டிவிஎஸ் கேபிடல் பண்ட் நிறுவனதலைவர் சீனிவாசன் கூறுகையில், ‘‘தமிழகத்துக்கான நெதர்லாந்து கவுரவ துணை தூதராக நியமித்து என்னை பெருமைப்படுத்தியுள்ளனர். எனக்கு நெதர்லாந்துடன் நீண்ட கால வர்த்தக தொடர்பு உள்ளது. நெதர்லாந்துடனான எனது வர்த்தக தொடர்பு நினைவுகூரத் தக்கது. இதன்மூலம், இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவு மேம்படும். தமிழகத்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையே 400 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நட்புறவை மேலும் மேம்படுத்த பாடுபடுவேன். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கல்வி, குடிநீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் நெதர்லாந்து துணையுடன் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

மூலக்கதை