இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்உல்ஹக்கிம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கிரிக்கெட்டுக்காக பிறந்தவர் சச்சின். 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்த்து, அவர் எப்படிதான் பேட்டிங் செய்தார் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவே இருக்கிறது. சச்சின் போன்ற ஒருசில அசாதாரண பேட்ஸ்மேன்களால் மட்டுமே இதுசாத்தியம்.

தற்போதைய சூழல் போல அப்போதெல்லாம் ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்த பலரும் குறிப்பிட்ட பார்மெட்டில் 8 முதல் 8,500 ரன்கள் வரைதான் அடித்திருந்தனர்.சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில், 10,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இது யாராலும் முறியடிக்க முடியாது என்ற நிலையில், சச்சின் அதனையும் தாண்டி பலரது சாதனைகளை முறியடித்தார்.

தற்போது அவரது சாதனையை யார் முறியடிப்பார் என்பதில் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சச்சினுக்கு இருந்த ரசிகர்களை போல வேறு யாருக்கும் இருந்ததில்லை.

சச்சினை போன்று, என்னை டார்ச்சர் செய்த பவுலர் யாருமில்லை. அவரால் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின் வீச முடியும்.

மிதமான வேகத்திலும் பந்து வீச முடியும். பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும், அவர் ஜீனியஸ்.

சச்சினின் லெக் ஸ்பின்னை எதிர்கொள்வதில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பலமுறை அவரது பந்துவீச்சில் நான் ஆட்டமிழந்தேன்.

சச்சினே சிறந்த வீரர். அவர் ஓய்வு பெற்றிருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை