நிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் சீனாவிற்கு இன்று செல்கிறது இந்தியாவின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம்

தினகரன்  தினகரன்
நிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் சீனாவிற்கு இன்று செல்கிறது இந்தியாவின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம்

டெல்லி: சீன நாட்டின் வூகான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம் சீனாவுக்கு நிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் இன்று புறப்பட்டுச் செல்கிறது. இந்த விமானத்திற்கு சீன அரசு அனுமதியளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மருந்துகள் ஏற்றப்பட்டு காசியாபாத்தில் உள்ள ஹில்டன் விமான நிலையத்தில் இந்த விமானம் காத்திருந்தது. சீனாவின் அனுமதி கிடைத்ததையடுத்து இந்த விமானம் இன்று சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர செல்கிறது.இதே போன்று வூகான் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்த பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பலாம் என்று சீன அரசு அனுமதியளித்துள்ளது. முன்னதாக  சீனாவில் இருந்து 2 சிறப்பு விமானங்களில் 647 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தொழில்துறை முடங்கும் நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை