சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்

தினகரன்  தினகரன்
சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக உயர்வு: மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல்

டோக்கியோ: சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,663லிருந்து 2,715 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 77,658 லிருந்து 78,064 ஆக அதிகரித்துள்ளது. சீன நாட்டை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு  வருகின்ற மே மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு கப்பல் பயணிகள் மூலம் ஜப்பானுக்கும் பரவியுள்ளதால் ஒலிம்பிக் கமிட்டி முடிவு என தகவல் அளித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்துக்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும் கூறியுள்ளனர்.கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால், ஜப்பான் துறைமுகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இதன் தாக்கம் வேறு வகையில் உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. தற்போது டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 600-க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது. சீன பெருநிலப் பரப்புக்கு வெளியே ஒரே இடத்தில் அதிகம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனினும், இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விவகாரத்தை ஜப்பான் சரிவர கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்தது.

மூலக்கதை