ஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020

தினமலர்  தினமலர்
ஆசிய அணியில் கோஹ்லி * வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ மோதல் | பெப்ரவரி 25, 2020

தாகா: தாகாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்கும் ஆசிய லெவன் அணியில் இந்தியாவின் கோஹ்லி, லோகேஷ் ராகுல் இடம் பெற்றனர்.

வங்கதேசத்தின் ‘தந்தை’ ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரது 100வது பிறந்த நாள் (நுாற்றாண்டு) விழா வரும் மார்ச் 17, 2020 முதல் மார்ச் 26, 2021 வரை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஆசிய லெவன், உலக லெவன் அணிகள் மோதும் இரண்டு ‘டுவென்டி–20’ போட்டிகள் தாகாவில் வரும் மார்ச் 21, 22ம் தேதி நடத்த உள்ளனர்.

இதற்கான ஆசிய லெவன் அணியில் கோஹ்லி, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி என ஆறு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தவிர மலிங்கா (இலங்கை), ரஷித் கானும் (ஆப்கானிஸ்தான்) இதில் உள்ளனர். கோஹ்லி, ராகுல் இருவரும் ஏதாவது ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்பர். பி.எஸ்.எல்., தொடரில் பங்கேற்பதால் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஆசிய லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.

உலக லெவன் அணியில் தென் ஆப்ரிக்காவின் டுபிளசி, விண்டீசின் கெய்ல், போலார்டு, காட்ரெல், இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் உள்ளனர்.

இது உறுதியா

தற்போது நியூசிலாந்தில் உள்ள கோஹ்லி, இரண்டாவது டெஸ்ட் (பிப். 29–மார்ச் 4) முடிந்த பின், சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் (மார்ச் 12–18) பங்கேற்கிறார். பின் ஐ.பி.எல்., தொடர் மார்ச் 29ல் துவங்குகிறது. இந்த நெருக்கடியான அட்டவணையில் கோஹ்லி, தாகா செல்வாரா என இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அணி விவரம்:

ஆசிய லெவன்

கோஹ்லி, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி (இந்தியா), மலிங்கா, திசரா பெரேரா (இலங்கை), ரஷித் கான், முஜீப் அர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்), சந்தீப் லாமிச்சனே (நேபாளம்), தமிம் இக்பால், முஷ்பிகுர், லிட்டன் தாஸ், மகமதுல்லா (வங்கதேசம்).

உலக லெவன்

அலெக்ஸ் ஹெல்ஸ், பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), கெய்ல், போலார்டு, பூரன், காட்ரெல் (விண்டீஸ்), டு பிளசி, லுங்கிடி (தெ.ஆப்.,), ஆன்ட்ரூ டை (ஆஸி.,), மெக்லீனகன் (நியூசி.,), பிரண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே).

மூலக்கதை