வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி | பெப்ரவரி 25, 2020

தினமலர்  தினமலர்
வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி | பெப்ரவரி 25, 2020

தாகா: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் அசத்த, வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி தாகாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் மோதியது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 265, வங்கதேசம் 260/6 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

‘சுழல்’ ஜாலம்

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. தஜில் ‘சுழலில்’ கசுசா (10) ஆட்டமிழந்தார். பிரண்டன் டெய்லர் 17 ரன்கள் எடுத்தார். நயீம் பந்துவீச்சில் மருமா (41), ஆன்ஸ்லே (4) சிக்கினர். கேப்டன் எர்வின் (43), சிக்கந்தர் ராஜா (41) ஆறுதல் தந்தனர். ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் சார்பில் இரு இன்னிங்சையும் சேர்த்து நயீம் 9 விக்கெட் (4+5) கைப்பற்றினார்.

15

கடந்த 2018ல் டிசம்பரில் தாகாவில் நடந்த விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. பின், நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்ந்தது. தற்போது, 15 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் அரங்கில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

2

வங்கதேச அணி டெஸ்ட் அரங்கில் 2வது முறையாக, இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன், விண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 2018ல் நடந்த தாகா டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை