அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் :ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் :ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

ஜெனீவா : பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43வது கூட்டம் நடைபெற்று வருகிறது.  இன்றைய நிகழ்வின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பலரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட் ஆகியோர் அடங்குவர். காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் அனைத்து சமூகங்களின் மனித உரிமைகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய  ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ், உலகிலேயே அதிக அளவிலான மனித உரிமை மீறல்களாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் இருப்பதாக தெரிவித்தார். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மனித உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிப்பது, அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மூலக்கதை