வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு இறுதி அஞ்சலி

தினகரன்  தினகரன்
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு இறுதி அஞ்சலி

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. டெல்லி மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவு  மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது.  கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி  நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எனினும், இந்த கலவரத்தில், கோகுல்புரியில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ரத்தன் லால் என்பவர்  கொல்லப்பட்டார்.

மூலக்கதை