உலகளவில் காற்றின் தரம் குன்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
உலகளவில் காற்றின் தரம் குன்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

டெல்லி: உலகளவில் அதிக காற்று மாசு உள்ள நகரங்களின் பட்டியலில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு இந்திய நகரங்கள் இடம்பிடித்திருப்பது சர்வதேச அளவில் காற்றின் தரம் 2019 எனும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. உலகின் மிக மோசமான காற்றின் தரம் குறைந்த நாடுகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், இந்தியா மீண்டும் அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் குறித்த அறிக்கையின்படி சீனா முன்னேற்றத்தை கண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டிற்கு பெயர் போன சீனாவின் பீஜிங் நகரம், மாசு அளவை பெருமளவு குறைத்ததால் இந்த பட்டியலில் பல நகரங்கள் முன்னேறியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 89வது இடத்தில் இருந்த பீஜிங், தற்போது 199வது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் முதல் 20 மாசு நிறைந்த நகரங்களுக்குள் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் வட உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகரான புது டெல்லியில் நகரமான காஜியாபாத் உலகின் மிக மோசமான காற்று மாசடைந்து வரும் நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில காலமாக புது டெல்லியில் சில பகுதிகளில் காற்றின் அளவு 800 தாண்டிய நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது மிகவும் மோசமானதும், அபாயகரமானது என அந்நாட்டின் சுகாதார அமைப்பினர் சுட்டிக்காட்டினர். அதற்கடுத்த நிலையில் மோசமான காற்று மாசு கொண்ட இந்திய நகரமாக, டெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத் உள்ளது. தற்போது அதிகரித்திருக்கும் காற்றின் மாசானது முன்பை விட மூன்று மடங்கு அதிகமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வாறு ஏற்படும் காற்றின் மாசு தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை