முகமது சயீத்தின் கருத்தால் மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: மோடி விளக்கமளிக்கக் கோரிக்கை

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
முகமது சயீத்தின் கருத்தால் மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: மோடி விளக்கமளிக்கக் கோரிக்கை

பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முஃப்தி முகமது சயீத் தெரிவித்த கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்கக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

மக்களவை கூடிய உடன் கேள்வி நேரத்தை தொடங்கவிடாமல் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை எழுப்பின. பிரதமர் மோடி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் முஃப்தி முகமது சயீத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முஃப்தி முகமது சயீத்தின் கருத்துக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என கூறினார். எனினும் அதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டன. கூச்சல் குழப்பத்துக்கு இடையே கேள்வி நேரம் தொடங்கியது. தொடர்ந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு வந்து கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும் அதே பிரச்னை எழுப்பப்பட்டதால் மேலும் 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடி நடைபெற்று வருகிறது.

மூலக்கதை