CAA உள்நாட்டு பிரச்சனை: பாகிஸ்தானுடன் நட்புறவு உள்ளதால் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்...அதிபர் டிரம்ப் பேட்டி

தினகரன்  தினகரன்
CAA உள்நாட்டு பிரச்சனை: பாகிஸ்தானுடன் நட்புறவு உள்ளதால் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார்...அதிபர் டிரம்ப் பேட்டி

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக முதன்முறையாக அதிபர் டிரம்ப் தனது குடும்பத்துடன் நேற்று  இந்தியா வந்தார். நேற்று, அகமதாபாத், தாஜ்மாலை பார்வையிட்ட டிரம்ப், டெல்லி திரும்பினார். தொடர்ந்து, இன்று பிரதமர் மோடியுடன் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்குப்பின் செய்தியாளர்களிடம்  பேட்டியளித்த அதிபர் டிரம் பேசிய பின்வருமாறு;* 2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது. * எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது.* இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.* ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பது குறித்து பேசினோம்.  * ஹெச்1-பி விசா விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன்.* எரிசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகி உள்ளது. * மதசுதந்திரத்திரம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன். * மதசுதந்திரத்திரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார்.* இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுடன் இணைக்கமாக தாங்கள் செயலாற்றி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். * இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். * இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை முள்ளாக உள்ளது. * பிரதமர் மோடியுடன் காஷ்மீர் பிரச்சனை பற்றி விவாதித்தேன். * பாகிஸ்தானில் இருந்து வரும் பிரச்சனைகளை இந்தியா சமாளிக்கிறது.* பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்புறவுடன் உள்ளது.* இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் தயார்.* குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கவில்லை. * குடியுரிமை சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். CAA பற்றி பதில் கூற விரும்பவில்லை. * குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக சரியான நடவடிக்கையை இந்தியா எடுக்கும். * டெல்லியில் நடந்த வன்முறை பற்றி கேள்விபட்ட போதிலும் அதுபற்றி பேசவில்லை.* டெல்லி ஏற்பட்ட வன்முறை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. * தலிபான்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்வது குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்.* தலிபான் அமைப்பின் சமாதான உடன்பாடு செய்வது பலன் அளிக்கும் என்று நம்புகிறேன். * அமெரிக்கா உலக போலீஸ்காரன் அல்ல, பல நாடுகளில் இருக்கும் எங்கள் துருப்புகளை திரும்ப அழைப்போம். * உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது.* உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். * அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரியை இந்தியா விதிக்கிறது. * அதிக வரி விதிப்பதுதான் வர்த்தக ஒப்பந்தத்துக்கு இடையூறாக உள்ளது.* இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா மிகக் குறைந்த வரிதான் விதிக்கிறது. * பிரதமர் மோடி ஆன்மிகவாதி, அமைதியானவர், அதே நேரத்தில் மிக வலிமையான தலைவர். * மிக உறுதியான தலைவரான மோடியால் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும்.  * எந்த ஒரு பிரச்னைக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. * ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். * இந்தியா வலிமையான நாடு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வலிமை இந்திய மக்களிடம் உள்ளது* பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்து ஏதும் வரவில்லை. * பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு உதவ தயார். * ஆப்கானிஸ்தானில் 99% மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். * பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை என்னை விட யாரும் கூடுதலாக எடுத்ததில்லை என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை