பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் கட்டப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலய சுவர் கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் கட்டப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலய சுவர் கண்டுபிடிப்பு

பெல்ஜியம்: பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் கட்டப்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலய சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெல்ஜியத்தின் கெண்ட் நகரில் உள்ள செயிண்ட் பாவோ கிறிஸ்தவ தேவாலய சுவரினை இறந்து போன மனித எலும்புகளை கொண்டு கட்டியுள்ளனர். இந்த சுவரினை பார்த்து வியந்த ஆராய்ச்சியாளர்கள், அந்த எலும்புகூடுகளை ஆராய்ச்சி செய்த போது அதற்கு சுமார் 500 வயது இருக்கும் என தெரிவித்துள்ளனர். செயிண்ட் பாவோவில் 942- ல் உள்ள செயிண்ட் பாப்டிஸ்டின் தேவாலயத்தை புதுபித்து செயிண்ட் பாவோ என்ற புதிய தேவாலயத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தேவாலயமானது 1566 ஆம் ஆண்டு சில காரணங்களால் இடிக்கபட்டுள்ளது. பின்னர் இடிக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் முன் உள்ள கல்லறையில் புதிய தேவாலயம் ஒன்றை கட்ட முடிவெடுத்துள்ளனர். இதற்கென அந்த கல்லறையை முழுவதும் அகற்றி அங்கு புதைக்கப்பட்டுள்ள மனித எலும்புகளை கொண்டு புதிதாக உருவாக்கபட்ட தேவாலயத்தின் சுவரில் புதைத்து கட்டியுள்ளனர். மேலும் 17 ம் நூற்றாண்டு சுவரில் புதைக்கட்ட அந்த எலும்பின் வயதானது 200 ஆக இருக்கும் நிலையில் தற்போது 500 வயது இருக்ககூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கிறிஸ்தவ மத வழக்கபடி இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை பின்பற்றி வந்துள்ளனர். அதற்கென கிறிஸ்தவ தேவாலயத்தை சுற்றி இறந்தவர்களை புதைக்க கல்லறை அமைக்கபட்டிருக்கும். அங்கு அடுத்தடுத்து வரும் இறந்தவர்களின் உடல்களை புதைக்க இடம் இல்லாத நிலையில் கல்லறை முழுவதும் அகற்றபட்டு அங்கிருக்கும் மனித எலும்புகளை கொண்டு தேவாலய சுவர்கள் கட்டுவது பழங்கால கிறிஸ்தவ பழக்க வழக்கமாக இருந்து வந்துள்ளது. மேலும் இந்த தேவாலய சுவரில் உள்ள எலும்புகளானது போரில் இறந்தவர்களின் உடல்களாக கூட இருக்கலாம் என கணித்துள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.

மூலக்கதை