“ஏழைகளின் நிலை 7 ஆண்டாக மாறவில்லை”: தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தகவல்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
“ஏழைகளின் நிலை 7 ஆண்டாக மாறவில்லை”: தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தகவல்

நம்நாட்டில் தனிநபர் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களின் நிலை உயரவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையை மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. 2011-12ம் நிதி ஆண்டின் நிலவரப்படி குடும்பங்களின் செலவழிக்கும் திறன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது கூறப்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்களில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய ஏழைகளின் நிதி நிலை கடந்த 7 ஆண்டுகளாக மாற்றமின்றி நீடிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர தனிநபர் செலவழிப்பு அடிப்படையில் 2004 முதல் 2011வரை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் நிலை ஒரே அளவில் தொடர்வதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை