காரைக்காலில் மாரத்தான் போட்டியில் நெரிசலில் சிக்கி 22 பேர் காயம்

தினகரன்  தினகரன்
காரைக்காலில் மாரத்தான் போட்டியில் நெரிசலில் சிக்கி 22 பேர் காயம்

காரைக்கால்: காரைக்காலில்  தனியார் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது இதில் 700 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி தொடங்கியவுடன்  மாணவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு ஓட தொடங்கினர். இவர்களுக்கு பின்னால்  மாணவர்களின் பெற்றோர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்ல தொடங்கினர். இதனால் நெரிசலில் சிக்கி மாணவர்கள் அடுத்தடுத்து கீழே விழத்தொடங்கினர்.  இதில் 18 மாணவர்களும் போட்டி ஏற்பாட்டாளர்களில் 4  பேரும்  காயமடைந்தனர்.

மூலக்கதை