துருக்கியில் நிலநடுக்கம்; 8 பேர் பலி

தினகரன்  தினகரன்
துருக்கியில் நிலநடுக்கம்; 8 பேர் பலி

இஸ்தான்புல்: துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் பலியாகினர். துருக்கியின் ஈரான் எல்லையில் உள்ள வான் மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் சுமார் 25 பேர் காயம் அடைந்து, சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில் இதே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை