பிரதமர் மோடி இனிய நண்பர்; இந்திய மக்களுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன்...இந்தியா புறப்படும் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி இனிய நண்பர்; இந்திய மக்களுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன்...இந்தியா புறப்படும் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்:  2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது குடும்பத்துடன் இந்தியா புறப்பட்டார். நாளை பிற்பகல் இந்தியா வரும் அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், அவரது மகள் இவான்கா, மருமகன் ஜாரெட்  குஷ்னர் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள்  குழுவினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இந்திரா பாலம் மற்றும் கோட்டேஷ்வர் கோயில் வழியாக மோட்டேரா கிரிக்கர்  மைதானம் செல்கின்றனர்.தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய மோட்டேரா மைதானத்தை அதிபர் டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார். ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட  ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக அகமதாபாத் விமான  நிலையம் வந்திறங்கும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா  ஆகியோருக்கு விமான நிலையத்தில் ‘சங்க்நாத்’ எனப்படும் சங்க நாதம் இசைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதிபர் டிரம்ப், அகமதாபாத் நிகழ்ச்சியை  முடித்துக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள உலக அதிசயமான  தாஜ்மகாலுக்கு தனது மனைவி, மகள், மருமகனுடன் சென்று சுற்றிப்  பார்க்கவுள்ளார்.நாளை மறுநாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு, பிரதமர் மோடியுடனான ஆலோசனை, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு   உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. அதன்பின், 2 நாள் இந்திய பயணத் திட்டத்தை முடித்துக்கு கொண்டு டிரம்ப் குழுவினர் வாஷிங்டன் புறப்பட்டு   செல்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது  குடும்பத்தினருடன் இந்தியா புறப்பட்டார். இந்தியா புறப்படும் முன் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், இந்திய பயணம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என மோடி கூறியுள்ளார்.  இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன்; பிரதமர் மோடி என்னுடைய இனிய நண்பர்; நாங்கள் மில்லியன் கணக்கான  மற்றும் மில்லியன் கணக்கான மக்களுடன் இருப்போம். நான் பிரதமருடன் நன்றாகப் பழகுகிறேன் என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை